உ
1. ஸ்ரீமாதா
அம்மா உனக்கு நமஸ்காரம்
அன்பும் அருளும் தரவேண்டும்                     (அ)
ஸ்ரீஎன்ற திருவின் அவதாரம்
ஸ்ரீஎன்றால் அமுதவடிவாகும்                      (அ)
அழகாய் தந்தாய் ஞானானந்தம்
பழமைப் பொருள் நீ பரமானந்தம்
குழந்தை நானே அன்னை நீயே
அமுதுண்ண பெறுவேன் அன்புடனே                (அ)
விடமுண்ட சிவனார் உயிர் பிழைத்தார்
திடமான உந்தன் திருவடிவால்
தடையில்லா ஞானம் நான் பெறுவேன்
கடத்தினுள் உன்னை வரவழைத்தேன்              (அ)
2. ஸ்ரீமஹாராக்ஞீ
பக்தி செய்தேன் உந்தன் பாதத்திலே
புவனம் 14ம் ஆளும் புவநேச்வரியே                (ப)
பேரரசி நீ படைத்து காத்து அருளும் பேரரசி
பக்குவமான பரந்த மனதுடன்                      (ப)
ஞானாநந்த நிலை அளித்தாய் பரமானந்த பர வெளியில்
ஞாலம் தன்னை பரிபாலித்தாய் நலமுடனே
தன்னைத்தான் அறிந்திடவே அறிவளித்தாய்
பின்னை பிறப்பறுத்த பராசக்தி                     (ப)
திருவருள் தந்திடும் தத்துவத் தாய் நீ
அருள்சக்தி வடிவான ஸத்குரு ருபிணீ
கருவினை காக்கும் கரத்தவள் நீ
தருவாய் விளங்கும் திருவே நீ                    (ப)
3. ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரி
ராகம் - ஆனந்த பைரவி
அரியணை மீதமர்ந்த ஆதிசக்தியே
அறியாமை நீக்கிடுவாய் ஆதிசக்தியே                     (அ)
நிலையான மனமருளும் நித்யையே
அலைந்து திரியும் என் மனமெனும்                      (அ)
ஞானமெனும் சிம்மம் நான்கு கால்கள் அதற்கு
கனமான மனம் புத்தி சித்தம் அஹங்காரம்
தினமும் பணிய தரவேண்டும் வரம்
அன்னை உந்தன் அருளே நிரந்தரம்                       (அ)
மஹிமை உனக்கிங்கே ஸ்ரீமத் ஸிம்;மாசனம்
அகில உலகும் இங்கே உன் இமை அசைவு
துகளாகும் துன்பங்கள் திருவடி பணிந்தால்
ஜகமாளும் ஜகன்மாதா உனக்கே நமஸ்காரம்              (அ)
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக