வியாழன், 5 டிசம்பர், 2013

தொடர்ச்சி

4. ஸ்ரீசிதக்னி குண்ட ஸம்ப+தா

ராகம் - மோஹனம்

சித்தாம் அக்னி குண்டத்திலே
சீரிய லலிதை உதித்திட்டாள் ஸமபுத்தி எனும      (சி)

தேவர்கள் செய்தார் பெரும் யாகம் அதில்
திருவருள் தந்தது திரிபுரையாம் அங்கு              (சி)

அசுரர்கள் கொட்டம் அடங்கிடவே
திசையெங்கும் ஒளிர அவதரித்தாள்
கசடற கற்ற முனிவரெலாம் அவள்
இசையினை முழங்க உயர் ஞான                   (சி)

அசையும் சித்து அவளேதான் மனம்
அசையும்போதில் அவள் மறைவாள் நல்
இசையாம் ஞான ஆனந்தம் அந்த
விசையில் வேத ஒலியாவாள்                       (சி)


5. ஸ்ரீதேவ கார்ய ஸமுத்யதா

ராகம் - கல்யாணி

தவத்தினை செய்தது தேவக்கூட்டம் அந்த
தவத்திற்கு மகிழ்தது அன்னை உள்ளம்              (த)

அசுரரை அழிக்க அவள் வந்தாள் நல்
சுரராம் தேவர்களை காத்து நின்றாள்                (த)

காமக்ரோதம் என்பது கொடு அசுரர் அதை
காமேச்வரி வந்து மாற்றி அமைத்தாள்
சேமங்கள் சேர்ந்தது தேவர் மனத்தில் நல்
காமமாம் ஞானாநந்த பேறு தந்தாள்                 (த)

ஸாத்வீக செயல் எல்லாம் தேவராவார்
ஆத்மீக வாஸனைதான் அமராவதி
சுத்த மனமிங்கே இந்திரனாம் அவரை
காத்திடும் கைக்கிங்கே நமஸ்காரம்                  (த)

6. உத்யத்பானு ஸஹஸ்ராபா

ராகம் - ஆனந்தபைரவி

ஆயிரம் ஞாயிறு உதித்தது போல்
அன்னை இங்கே விளங்குகிறாள்           (ஆ)

அருளின் சக்தி அவளே முக்தி
ஆயிரம் பெயரில் அவளின் பக்தி           (ஆ)

அறிவில் மகிழ்வு அவளால் வந்தது
பெரிதாம் சூரியப் ப்ரகாசம் கொண்டது
துரிதமாய் அக்ஞான தொல்லை தீர்ப்பது
மரணத்தை நீக்கும் மங்களம் கொண்டது             (ஆ)

ப்ரகாசம் விமர்சம் இணைந்தால் சக்தி
தரமான பக்தருக்கு தந்திடும் அருளை
அறத்தினை செய்ய விரும்பிடும் மனமும்
வரத்தினை நல்கும் வாக்கின் குணமும்             (ஆ)
7. சதுர்பாஹ_ ஸமன்விதா

ராகம் - மோஹனம்

ஸந்ததம் எனக்கு அருள் தா
சதுர்பாஹ_ ஸமன்விதா                             (ஸ)

நால்வகை ஸாதனம் நான் செய்ய
நால்வேத நூலும் நாவிலுற                         (ஸ)
ஸ்ரீகுரு வந்து ஸோஹம் பாவனை தந்தார்
ஸ்ரீநாத கத்யத்தை நாவிலுற மொழிந்தார்
ஸ்ரீநதரம் தன்னில் சிறப்புடன் விளங்கும்
சீரான ஞானாநந்தம் சிரந்தன்னில் நின்றிட                    (ஸ)

கையில் புஷ்பம் கருணையாய் கொண்டாய் மறு
கையில் கரும்பை மனமென தரித்தாய்
வாயிலாம் முக்திக்கு விதவித தர்மம்     
தாயாய் வந்து தயைகுணம் கொண்டு                (ஸ)

8. ராகஸ்வருப பாசாட்யா

ராகம் - ராகமாலிகா

ராகமெனும் பாசம் நம் ராகத்வேஷ நாசம்
ராஜராஜேச்வரி கையிலுள்ள                         (ரா)

மனமே ஆசையை துறந்து விடு அவள்
இனத்தில் நீ இன்று சேர்ந்து விடு                   (ரா)

சரணத்தை பிடித்துவிட்டால் நம்
சங்கடங்கள் தொலைந்துவிடும்
மரண பயம் நீங்கிவிடும் அவள்
ஸ்மரணம் மனம் பெற்றுவிடும்            (ரா)

உலகத்தின் ஆசையை உந்தன் மனம் துறந்துவிட்டால்
உயர்வான ஆனந்தம் நல் ஞானத்தில் லயித்துவிடும்
அயர்வெல்லாம் இற்றுவிட ஆனந்தம் மனதிலுற

பயத்தினை போக்கிடவே பராசக்தி கையிலுள்ள      (ரா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக