புதன், 11 டிசம்பர், 2013

தொடர்ச்சி - 24 முதல் 28 வரை

24 முதல் 28 வரை

24 நவ வித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா

பவழம் போன்ற இதழ் கொண்ட
அவளைப் பணிந்தால் அன்பு வரும்                  (ப)

அன்பே அன்னையின் உதடாகும்
தன்னை அறிவதே தவமாகும்                       (ப)

ருதம்பரா பண்பை அடைந்து விட்டால்
சதமாய் பிறவியும் ஆகி விடும்
பதமாய் அன்னையை போற்றிவிட்டால்
சுதந்திரம் என்பதை அடைந்திடலாம்                 (ப)      

ஞானம் என்பது கோவைப்பழம் அதுவே
அன்னையின் செவ்வாய் நல்ல நிறம்
பின்னைப் பிறப்பை போக்கிவிட்டால் அதுவே
தன்னைத்தான் அறியும் நல்ல விதம்                (ப)

25. சுத்தவித்யாங்குராகார த்விஜபங்க்தி த்வயோஜ்வலா

ராகம் - சாமா

சுத்தவித்தையே அன்னையின் (இரு)பல்வரிசையே
அத்தனின் சரிபாதியே                               (சு)

விதவிதமான தத்துவங்கள் உலகினிலே அதில்
சதமாக உள்ளதிங்கே சித்சக்தியே                    (சு)

தன்னை அறிந்தால் பிறப்பில்லையே
ஞானாநந்தம் என்பார் அந்நிலையே
பண்டைய முனிவரின் பரம்பரையே நாம்
அண்டிட அவளன்றி ஓர் கதியில்லையே             (சு)

அருள்சக்தி நமது வழித்துணையே
இருள்தன்னை அகற்றிடும் ஒளிவெள்ளமே
இருபல் வரிசைக்கோர் இணையில்லையே
கருப்பொருள் அவள்தான் தடையில்லையே          (சு)

26. கற்பூரவீடிகாமோத ஸமாகர்ஷிகந்தரா

ராகம் - தோடி

கற்பூர வீடிகை அன்னை தன் செவ்வாயில் திகழும்           ()

மூக கவி பெற்ற அருள் நாம் மறக்க முடியுமா?
கவிகாளிதாஸன் கவித்வம் எதனால் தெரியுமா?              (க)

ஞானாநந்தம் பெறும் வல்லமை அதனாலே
கானம் பாடும் கருத்தும் அதனால் சிதறாதே
தன்னை அறிவது தாய் அவள் அருளாலே
பின்னை பிறப்பறும் அவள் வாய் சொல்லாலே                (க)

பூஜையில் நாம் வைக்கும் கர்பூர வீடிகை நம்
பிறவித் தொடரை அறுக்க அது பூர்வபீடிகை
திறவுகோல் ஞானத்திற்கு பக்திஎனும் சாவி மனத்
துறவுதான் முக்கியம் எங்கும் ஓடாது தாவி                   (க)

27. நிஜஸல்லாப மாதுர்ய வினிர்பச்சித கச்சபி

உறையில் இட்டு மூடினாள் ஸரஸ்வதி தன் வீணையை       (உ)

லலிதையின் குரலுக்கு ஈடு இணை இல்லையென
லஜ்ஜையினால் தன் வீணையை                              (உ)

நாரதர் தன் வீணையும் நாணம் கொண்டது
ஆரணப்பொருளுக்கு ஆர்வம் கொண்டது
காரணம் அவள் என கச்சபீ நினைத்தது
ப+ரண வித்தைக்கு பூஜையை செய்தது              (உ)

ஞானாநந்தமே நானிலத்தில் சிறந்தது
ஞாலம் இங்கு ஓர்நாள் மறைவது
பாலமாம் பக்திக்கு இந்நாமம் உயர்ந்தது
தூலமாய் கண்டிட வாக்தேவி மொழிந்தது           (உ)


28. மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத்காமேச மானஸா

ராகம் - கானடா

புன்னகை செய்தாள் புவனேசி அதில்
தன்மனம் இழந்தார் காமேசர்                       (பு)

மாயாவிசிஷ்ட சைதன்யம் அது
மாயையால் ஈசனை மயக்கிவிடும்            (பு)

ஞானாநந்தம் அடைந்து விட்டால்
ஞாலத்தில் பற்று இற்று விடும்
காலனும் பயந்து ஓடி விடும் அவள்
காலடி தன்னை பணிந்து விட்டால்            (பு)

சிவசக்தி மயமாம் உலகமிது என்னும்
சீரிய ஞானம் அடைந்திடவே
சித்சக்தி இரண்டாய் வந்து நம்மை
புத்தியால் சிறக்க செய்ததுவே                    (பு)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக