திங்கள், 9 டிசம்பர், 2013

(தொடர்ச்சி)

9. க்ரோதாகார அங்குசோஜ்வலா

ராகம் - பைரவி

கோபம் கொள்வாய் அம்மா எந்தன்
கொடிய மனம் மீது நீ அங்குசமாம்                                       (கோ)

மனம் குரு சொன்னதை கேட்பதில்லை
மாதா உன்னை எப்போதும் நினைப்பதில்லை              (கோ)

ஞானாநந்தத்தை நான் நாடிட வேண்டும் பரி
பூரணமான பதத்தை பெற்றிட வேண்டும்
ஆணவ கன்மங்கள் அழிந்திட வேண்டும் என்
மனம் என்றும் உன்னடி பணிந்திடவேண்டும்               (கோ)

குரு சொன்ன வழியில் சென்றிடவும் தாய்
கரு குழிதன்னை கடந்திடவும்
திருவாம் உன்னை தெரிந்திடவும் மன
வருத்தங்கள் மண்ணில் மடிந்திடவும்                     (கோ)


10. மனோருபேக்ஷு கோதண்டா

ராகம் - சாவேரி

மனமே வில்லாய் மாறிவிடு
மங்கள அம்பிகை கையினிலே                     (ம)

வளைத்த படியெல்லாம் வளைந்து விடு
வகையாம் கரும்பு ருசியுடனே                                     (ம)

ஞானாநந்த சாறு உண்டு அதில்
ஞாலத்தின் சாயை விழுவதுண்டு
காலத்தை கடந்த கழுத்துண்டு அதை
கருத்துடன் கையாள உரமுண்டு                    (ம)

மாயையாம் அசுர வதம் செய்ய
தாயவள் மனத்தை கை தரித்தாள்
தூயதாய் வைத்தால் தயை புரிவாள் பாபம்
காய்ந்திடநினைத்து அருள் புரிவாள்                       (ம)



11. பஞ்ச தன்மாத்ர ஸாயகா

ராகம் - கானடா

ஐந்தான புலன்களே அன்னை கை மலர்களே
அதை அறிந்தால் உயர்வு மனதிலே                      (ஐ)

மனமெனும் வில்லுக்கு தொடுத்திடும் பாணம் வேண்டும்
மலர்களே அவை நம் புலன்களே                         (ஐ)
               
ஞானாநந்த மணம் அதில் வீசிடுமே உயர்
வானத்தில் வேகமாய் சென்றிடுமே
பாணங்கள் உள்முகம் திரும்பி விட்டால்
பாதாள அசுரபகை அழிந்திடுமே                    (ஐ)

மனம் சுத்தமானால் மலர் சுத்தமாகும் அவள்
இனம் என்று உணர்ந்தால் இறை சித்தமாகும்
தனமுடன் மூவாசை தான் தீர்ந்து விட்டால்
கனமின்றி மோக்ஷம் தான் ஸித்தமாகும்                  (ஐ)


12. நிஜாருண ப்ரபாபூர மஞ்சத் ப்ரம்மாண்ட மண்டலா

ராகம் - பைரவி

அண்டங்கள் அனைத்துமிங்கே உந்தன் படைப்பு அது
அருணமாய் ஒளிர்வது உந்தன் சிறப்பு              (அ)

சிறிது கண்ணை முடினால் சிவப்பான உருவம் அதில்
பெரிதாக தெரிவது பரப்ரம்மம்                                     (அ)

உள்ளே இருப்பதுதான் வெளியேயும் அங்கு
துள்ளிதிரிவதுதான் அங்குஷ்ட மாத்ரம்
வெள்ளை வெளேரென்ற சிவ ருபம் அங்கு
சுள்ளென்று தெரிவதுதான் நிஜ அருணம்                  (அ)

ஞானாநந்த மிங்கே சிவப்பானது அதை
தானாய் அடைவதுதான் உயர்வானது
ப+ணாய் விளங்குவதே ப்ரம்ம ரந்த்ரம் அதை
பேணிக் காப்பதுதான் யோக வைபவம்              (அ)


13. சம்பகாசோக புன்னாக ஸெளகந்தித லசத்கசா

ராகம் -
மணம் மிக்க மலர்களை சூடி நின்றாள் வாழ்வு
மணம் வீச மங்களம் அருளிடுவாள்                      (ம)

சம்பக அசோக புன்னாகம் அவை
சீக்கிரம்; மணம் பெறுவதவ ளாலே                       (ம)

ஞாலத்தில் பல பல மலருண்டு அதில்
ஞானத்தின் மணமிங்கே எதற்குண்டு ?
ஞானத்தில் மகிழ்;ந்தால் நலமுண்டு அதை
ஞானிக்கு தந்திட அவள் அருளுண்டு                               (ம)

அருள்சக்தி தந்து ஆட்கொள்வாள் மன
மருள் தன்னை நீக்கிட மனம் தருவாள்
தருவதில் அவளுக்கு நிகரில்லை அன்னை
கருவிலே பிறப்பது அவள் லீலை                        (ம)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக