திங்கள், 9 டிசம்பர், 2013

தொடர்ச்சி.....(14 முதல் 23 வரை)

14. குருவிந்த மணிச்ரேனி கனத்கோடீர மண்டிடதா

ராகம் - முகாரி

குருவிந்த மணியை அணிந்தவளே அம்மா
கும்பிட்டோம் உந்தன் திருவடியை                  (கு)

அரவிந்த முகத்தை கொண்டவளே அம்மா
தரவேண்டும் உந்தன் திருவருளை                   (கு)

ஞானாநந்தம் நான் அடைய இந்த
கானத்தில் கருத்தாய் வந்திடுவாய்
பானத்தில் உன்னை ஆவஹித்தோம்
தானமாய் தருவாய் நல் அறிவை                    (கு)

க்ரீடத்தில் கொண்டாய் உயர் மணியை
வேரிடம் எனக்கில்லை வேண்டிடவே
ஆரிய சிவனின் அருந்துணையே
பாரிலே பிறப்பை நீக்கிடுவாய்                       (கு)

15. அஷ்டமீ சந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா

அஷ்டமீ சந்த்ரன் உந்தன் அரைவட்ட நெற்றி முகம்
இஷ்டத்தை தருவதில் ஏன் தாமதம் ?                                      (அ)

நிலவைபோல குளிர்ச்சி கொண்டாய் எந்தன்
நிலைமையை பார்த்து இரக்கம் கொள்வாய          (அ)

ஞானமே ஆனந்தம் என அறிந்தேன் அந்த
ஞானம் உள்ளத்தில் நிலைத்திடச் செய்
தானாக ஒளியில்லை நிலவினுக்கு அந்த
திங்களளைப்போல நான் உந்தனுக்கு                (அ)

மதியின் மதியை சீராக்கினாய் அவன்
விதியை நீ நன்கு சரியாக்கினாய்
அதிகம் அறியாத பாமரன் நான் என்
விதியை மாற்றி ஆட்கொள்ளுவாய்                  (அ)


16. முகசந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷகா

ராகம் - தோடி

கஸ்தூரி திலகம் தரித்தவளே அது
சந்த்ரனின் களங்கம் போன்றதுவே                   (க)

அன்புக்கு இணைஇங்கே யாருமில்லை உந்தன்
பண்பினால் பகையிங்கே யாருமில்லை              (க)

பொட்டாகும் நெற்றியில் ஞானாநந்தம் அது
இஷ்டத்தை அருள்வதில் பரமானந்தம்
பட்டபகல் எனவே ப்ரகாசிக்கும் ஆசை
கட்டுக்கள் அனைத்தையும் பிரி;த்துவிடும்            (க)

அஸ்திபாதி ப்ரியம் என்பது அவள் நெற்றி அந்த
கஸ்தூரி பொட்டுதான் நாம ரூபம்
வஸ்துவில் உறைந்திட்ட சைதன்யம் அந்த
கஸ்தூரி பொட்டதற்கு உயிர் கொடுக்கும்             (க)


17. வதனஸ்மர மாங்கல்ய க்ருஹதோரண சில்லிகா

ராகம் - கேதாரகௌளம்

முகமெனும் வீட்டுக்கு தோரணமாம் புருவம் நல்
அகமுடை சிவனுக்கு ஆதரவாம்           (மு)

ஞானானந்தம் காரணமாம் நல்
கானத்தில் உறையும் பூரணமாம்           (மு)

உண்மை உரைப்பது ஆரணமாம் உயர்
தண்மையானது அவளின் குணமாம்
பண்டை முனிவரின் அனுபவமாம் இது
விந்தையான விழுப்பொருளாம்                      (மு)

அருள்சக்தி அருளும் அன்புருவாம் அது
வருகின்ற துன்பத்தை விலக்கிடுமாம்
தருகின்ற ஞானம் நிலைத்திடுமாம் அது
திருவாம் அன்னையின் திருவுருவாம்                (மு)


18. வக்த்ரல~;மி பரீவாஹ சலன்மீனாப லோசனா

ராகம் - தர்பார்

மீனலோசனீ அம்பா
முகமெனும் தடாகத்தில் ஓடும்                      (மீ)

மீனைப்போல பசியாற்றும் மீனா~P
தன்னைத்தான் அறியவே தயைபுரி                  (மீ)

ஞானாநந்தத் தடாகம் அதில்
நீள ஓடும் மனமீன்கள்
வானமென்னும் வேதம் அதில்
ஞானமென்னும் நிலவு                     (மீ)

உந்தன் பார்வை பட்டால் இந்த
உலகம் உயர்வை நாடும்
கலகம் எல்லாம் ஓயும் மனக்
கலக்கம் தெளிந்த நீராம்                             (மீ)
19.   நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா

ராகம் - மோஹனம்

லலிதை அவளின் ரூபம் நவ
சம்பக ப+வின் நாசி                                 (ல)

வாஸனை உணரும் நாசி துர்
வாஸனை தன்னை அழிக்கும்                       (ல)

நல்லதை மட்டுமே நுகரும் அது
அல்லதை அறவே ஒழிக்கும்
கற்றவர் சம்பக ப+வாம் அது
கொற்றவை அவளின் ழூக்காம்             (ல)

ஞானாநந்தம் பெற்றிடவே நல்
கானத்தில் அவளை தொழுதோம்
தீனராம் நம்மை காப்பாள் உயர்
வானோர் நிலையை அருள்வாள்           (ல)


20. தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸ_ரா

ராகம் - பைரவி

நிலவின் ஒளிக்கிங.தே ஓர் போட்டியுண்டு அது
லலிதையின் முக்கணி அழகாகும்                   (நி)

அஞ்ஞான இருள் இங்கே அகன்றுவிடும்
ஞானாநந்த ஒளியிங்கே வீசிவிடும்                   (நி)

ஸமாதி விருத்திதான் தாரகைகள் ஸம
தமாதி ஸாதனங்கள் அவள் அணிகள்
தாமாக வராது தத்துவங்கள் குரு
முகமாக வருவதே அனுபவங்கள           (நி)

திங்களின் ஒளீயோ இரவல் ஒளி நம்
அம்பிகை அணியோ ஸ்வயமாகும்
ஆயிரம் நாமத்தால் போற்றிடுவோம் அந்த
தாயவள் தரணியை காத்திடட்டும்                   (நி)


21. கதம்ப மஞ்சரீ க்லுப்த கர்ண ப+ர மனோஹரா

ராகம் - காம்போதி

சிரவணம் என்னும் காது அதில்
மனனம் என்னும் கதம்பம் அம்மா உனக்கு (சி)

தரணும் உந்தன் அருளை தாயே உன்னை பணிந்தேன்
பரத்தின் சக்தி நீயே                                 (சி)

குருவின் பாதம் அறிந்தேன் அவர்
திருவாம் உன்னை தந்தார்
சப்த ப்ரபஞ்சம் நீதான் பக்த
ஸப்த ரிஷிகள் வடிவம்                                                 (சி)

ஞானம் தரும் மகிழ்வு பர
ஞானம் வந்தால் தெளிவு
காதில் சூடும் மலர்கள் அது
வேதம் பாடும் கிளிகள்                     (சி)

22. தாடங்கயுகளீப+த தபனோடுப மண்டலா

ராகம் - சாமா

தாடங்கம் தரித்தனளே அன்னை
சூரிய சந்திரரை                                     (தா)

பாட்டிதில் வந்தனளே அன்னை வழி
காட்டிட நின்றனளே                                 (தா)

ஞானமே சூரியனாம் அந்த
ஞானமகிழ்ச்சியே சந்திரனாம்
வானத்தில் நிறைந்தனளாம் அவள்
கானத்தில் மகிழ்பவளாம்                            (தா)

அருள்சக்தி அவள் உருவாம் மாய
இறுக்கத்தை தொலைப்பவளாம்
குருவழி செல்பவர்க்கே அவள்
திருவருள் தருபவளாம்                    (தா)

23. பத்மராக சிலாதர்ச பரிபாவி கபோலப+:

ராகம் - சங்கராபரணம்

பத்மராகமும் நாணும் பராசக்தியின் கன்னம் பார்த்து
பாங்காக வாக்தேவி உரைத்தாள்           (ப)

ப்ரகாசத்திற்கு ஓர் ஈடு இணை இல்லை ஆன்ம
ப்ரகாசத்தை தந்தருளும் அவளின்                   (ப)

திடமாக வேண்டும் வைராக்யம் மண்
குடம் போலே குயவனும் நிமித்தமும்
உடல் பற்று நீங்கினால் உண்மை
படமாக புரிந்திடும் அவளழகு                        (ப)

ஞானத்தின் மகிழ்ச்சி ஓர்புறம் அஞ்
ஞானத்தின் அழிவு மறு புறம்
ஞாலத்தில் இதளை உணர்த்தவே

ஞாபகம் தந்த புலவர்கள் கூறும           (ப)

3 கருத்துகள்: